மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் அறிவிப்பு...! - ஜூன் 27 முதல் ஊட்டியில் கூடுதல் ஜாலி...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைகளின் அரசியான ஊட்டிக்கு, தினமும் காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இந்தப் பயணம் வெறும் பயணம் மட்டுமல்ல; அடர்ந்த பசுமைக்காடுகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைப்பாதைகள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் என இயற்கையின் பேரதிசயங்களை ரசிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாகும்.

இதனால், உள்நாட்டுப் பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த ‘பாரம்பரிய ரயிலில்’ பயணிக்கப் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இருப்பினும், குறைந்த அளவிலான இருக்கைகளே இருப்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஒலித்து வந்தது.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில், தென்னக ரயில்வே நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரும் ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9:10 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 2:25 மணிக்கு ஊட்டியை அடையும் வகையில் ‘சிறப்பு மலை ரயில்’ இயக்கப்பட உள்ளது.

இது தவிர, குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், கேத்தியில் இருந்து ஊட்டிக்கும் கூடுதல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே துறையின் இந்தச் சிறப்பான கோடைக்காலப் பரிசு, சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special mountain train announced between Mettupalayam Ooty Extra fun June 27th


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->