சென்னையில் 2 நாட்களுக்கு மின் கட்டண ஆன்லைன் சேவை கட்...! - மின்வாரியத்தின் 'சர்வர்' அப்டேட்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மின்சார வாரியத்தின் கணினி சர்வர் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை (மார்ச் 7, 8) ஆகிய இரு தினங்களுக்கு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்பம் போன்ற ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், தனது டிஜிட்டல் கட்டமைப்பை நவீனப்படுத்தும் நோக்கில் புதிய சர்வர்களுக்குத் தரவுகளை மாற்றும் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.இதன் முதற்கட்டமாக, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மின் பகிர்மான வட்டங்களில் இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

இதனால் பெரம்பூர்,பொன்னேரி, அம்பத்தூர், ஆவடி,எழும்பூர்,  வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, தி.நகர், அண்ணாசாலை, மயிலாப்பூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மார்ச் 8-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாகவோ பணத்தைச் செலுத்த இயலாது.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத் தடையால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க, மின் கட்டணம் செலுத்த மார்ச் 9-ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி எவ்வித அபராதமும் இன்றி கட்டணத்தைச் செலுத்தலாம்.

எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுமாறு மின்வாரியம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electricity bill online service cut for 2 days Chennai Electricity Boards server update


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->