சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு...! மண்டல வானிலை மையம் வெளியிட்ட அதிரடி அப்டேட்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் தாக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 25-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 26-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பநிலையைப் பொறுத்தவரை, வரும் 22 முதல் 26-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. உள் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
வரும் 23-ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

வரும் 26-ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இதேபோன்ற பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

அரபிக்கடல் பகுதிகளிலும் வரும் 22 முதல் 26-ஆம் தேதி வரை சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.

எனவே, மேற்கண்ட நாட்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கக்கடல் பகுதிகளில் வரும் 22 முதல் 26-ஆம் தேதி வரை எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லை.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chance of rain Chennai and surrounding areas today Action update issued by Regional Meteorological Center


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->