கதவைத் திறக்க சொன்னார்கள்...! நடுக்கம் தரும் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவேத் - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் தனது வித்தியாசமான ஆடை அலங்காரங்களாலும், தைரியமான கருத்துகளாலும் எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் நடிகை உர்பி ஜாவேத். ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமான இவர், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டு ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளார்.

உர்பி ஜாவேத்தின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து விட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் அதிகாலை சுமார் 3.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஒருவர் அவரது வீட்டு வாசலில் நீண்ட நேரம் தொடர்ந்து அழைப்பு மணியை அடித்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், மேலும் இரண்டு நபர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் உர்பி ஜாவேத்துக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததை அறிந்ததும், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து உர்பி ஜாவேத் தெரிவித்ததாவது,"நள்ளிரவில் தொடர்ந்து மணி அடித்ததால் சந்தேகமடைந்து வெளியே பார்த்தேன்.

அப்போது அந்த நபர் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்குமாறு வற்புறுத்தினார். வெளியேறச் சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அதனால் பயந்து போலீசை அழைத்தேன். போலீசார் வந்தபோதும் அவர்கள் முறைகேடாக நடந்துகொண்டனர். பலமுறை எச்சரித்த பிறகே போலீசார் அவர்களை வெளியேற்றினர்” என்றார்.

மேலும், “அதிகாலை நேரத்தில் ஒரு பெண்ணின் வீட்டின் வெளியே நின்று கதவைத் திறக்க வற்புறுத்துவது மிகவும் பயமூட்டும் அனுபவம். பெண்கள் தனியாக வாழும் சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்குகின்றன” என்றும் உர்பி ஜாவேத் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

told me to open door Urfi Javed shared terrifying experience


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->