டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் சந்திப்பு..!
Chief Minister MK Stalin meets Sonia Gandhi and Rahul Gandhi
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary
Chief Minister MK Stalin meets Sonia Gandhi and Rahul Gandhi