சென்னை: திமுக நிர்வாகி மிரட்டல்... S.I.R. பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொள்வதாக பேசும் ஆடியோ வைரல்!
chennai SIR DMK govt teacher
பள்ளிக்கரணையில் திமுக வட்டச் செயலாளர் ஆரோன் (எ) அரசு என்பவர் மிரட்டியதால், S.I.R. பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொள்வதாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, பள்ளிக்கரணையில், S.I.R. பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியை, திமுக வட்டச் செயலாளர் ஆரோன் (எ) அரசு என்பவர் மிரட்டியதால் தற்கொலை செய்துகொள்வதாக கதறிய ஆடியோ கேட்கவே பதைபதைக்கிறது.
S.I.R. என்ற ஒரு வாக்காளர் திருத்தத்தால், தங்கள் போலி வாக்குகள் பறிபோகும் அச்சத்தில், இந்த பணிகளை மேற்கொள்ளும் BLO-க்களான அரசு ஊழியர்களை அதிகாரத் திமிரோடு மிரட்டி, அவர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அதன்மூலம் S.I.R. பணிகளை முடக்கி விடலாம் என்று நினைக்கிறதா திமுக?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியதுபோல், SIR பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லை. அவர்களுக்கு அரசும், ஆளுங்கட்சியும் அழுத்தம் தரக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
chennai SIR DMK govt teacher