எல்.முருகன், கரு.நாகராஜன் மீது இரு பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது! பாஜகவினர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மாம்பலத்தில் நடந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் முருகன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவினர் குதிரை வண்டியில் ஒய்யாரமாக வந்தனர்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் முருகன், மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 6 பாஜகவினர் மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவின்போது அனுமதி இல்லாமல் குதிரை வண்டியில் வந்ததாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

உரிய அனுமதி இல்லாமல் குதிரை வண்டியில் வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai police case filed bjp leader murugan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->