குறிப்பிட்ட மதத்தை அழிப்பேன் என்று சொல்லிக்கொண்டு, கோவில்களை ஆக்கிரமித்து... கனிமொழிக்கு பாஜக நாராயணன் திருப்பதி பதிலடி!
BJP Narayanan thirupathi reply to DMK MP Kanimozhi
திமுக எம்பி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "யார் வலிமையாக இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் ஏதாவது ஒரு இடத்தை கண்டுபிடித்து விட முடியுமா என்று தேடிக்கொண்டிருப்பதோடு, தங்களின் அடையாளங்களை காண்பதற்காக மதத்தை, கோவில்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்க்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி ஒன்றை கோடரி கொடுத்துள்ளார்.
அதில், "யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, இருக்கிற இடத்தை விட்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, தங்களை எதிர்ப்பவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காக குறிப்பிட்ட மதத்தை அழிப்பேன் என்று சொல்லிக்கொண்டு, கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan thirupathi reply to DMK MP Kanimozhi