கூஸ்பம்ஸ்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டைப் பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர்...! - Seithipunal
Seithipunal


கடந்த மே 1ம் தேதி நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. மேலும், இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் யோகி பாபு,மிதுன் ஜெய்சங்கர்,எம்.எஸ்.பாஸ்கர்,கமலேஷ், ரமேஷ் திலக், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படமானது இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டனர்.இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டினார்.

இதுத்தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியுடன் அபிஷன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது"நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தற்கான காரணம் இன்று நிறைவடைந்தது.

அவர் என் பெயரை கூறி என்னை கட்டிபிடித்தது எனக்குள் கூஸ்பம்ஸ் ஆனது. மிக அருமையான மனிதர்" என பதிவிட்டுள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director of the film Tourist Family who received praise from superstar Rajinikanth


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->