சோர்வில்லா உழைப்புடன் தொடர்ந்து நாட்டுக்கு சேவை.. பிரதமர் மோடிக்கு ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து!
Continuous service to the nation with tireless effort Birthday wishes to Prime Minister Modi from Rangasamy
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை நாளை கொண்டாட உள்ளார் . இந்தநிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது சார்பிலும் புதுச்சேரி மக்களின் சார்பிலும் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னலமற்ற சேவை தொலைநோக்குமிக்க தலைமைத்துவம். நாட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்வதில் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை நிறைந்த உங்களது வாழ்வு, அனைவருக்கும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. தங்களது சீரிய வழிகாட்டுதலின் கீழ், இந்தியா வளர்ச்சி கண்ணியம் மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தின் பாதையில் உறுதியாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான, நிறைவான வாழ்நாளை அருளவும், அதே அர்ப்பணிப்பு, ஞானம் மற்றும் சோர்வில்லா உழைப்புடன் தாய்நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்யவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்- என்று முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
English Summary
Continuous service to the nation with tireless effort Birthday wishes to Prime Minister Modi from Rangasamy