துளையில் இருந்து மீண்டு வரும் ஓசோன் படலம்; உலக வானிலை அமைப்பு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


செப்டம்பர் 16-ஆம் தேதி உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது ஓசோன் படலத்தைப் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தவும், அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தவும் கொண்டாடப்படுகிறது.

ஓசோன் படலம் மூன்று ஆக்ஸிஜன் அனுக்கள் நிறைந்த பல்வேறு மூலக்கூறுகளால் ஆனது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 15 முதல் 30 கிமீ வரையிலான தூரத்தில் அமைந்திருக்கும் அடுக்கு மண்டலத்தில் இடம்பெற்றிருக்கிறது. 

இது சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களை (UV Rays) தடுத்து பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக, UVB வகை கதிர்வீச்சை தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்த UVB வகைக் கதிர்களானது, மனிதர்களுடைய உடம்பில் தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்த கூடியது.

ஓசோன் படலம் என்பது நிரந்தரமான ஒன்று தான் என்றாலும், அதிலிருக்கும் மூலக்கூறுகள் நிரந்தரமானவை அல்ல. அதாவது, புதிய மூலக்கூறுகள் உருவாகி ஓசோன் படலத்தில் இணைய, பழைய மூலக்கூறுகள் அழியும். இது ஒரு நிரந்தரமான செயல்முறையாகும்.

.ஆனால், இந்த ஓசோன் படலத்தில் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட தொழில் புரட்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு, வாகனங்களும் இருந்து வரும் காற்று போன்றவற்றால் மாசுபாடத் தொடங்கியது.

இதனால் பூமியில் மனிதர்கள் உருவாக்கிய சில பொருட்கள் மற்றும் இரசாயனங்களிலிருந்து வெளியாகும் புரோமின் மற்றும் குளோரின் உள்ளிட்ட சில வேதிப் பொருட்கள் ஓசோன் மண்டலம் உருவாவதை விட வேகமான அதன் மூலக்கூறுகளை அழிக்கத் தொடங்கின. இதன் காரணமாக ஓசோன் மண்டலத்தின் அடர்த்தி குறைந்து, அதில் துளையும் விழுந்தது.

1985-ஆம் ஆண்டு ஓசோன் மண்டலத்தின் அடர்த்தி குறைந்திருப்பதையும், அதில் துளை விழுந்திருக்கும் அபாயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். அதாவது, பூமியின் இயற்கைப் பாதுகாப்பு அடுக்கான ஓசோனில் துளை விழுந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளையை சீர் செய்யும் பொருட்டு, 1987-ஆம் ஆண்டு மாண்ட்ரியல் நெறிமுறையில் உலகின் அனைத்து நாடுகளாளும் கையெழுத்திட்டன. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே நெறிமுறை இந்த மாண்ட்ரியல் நெறிமுறை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

குறித்த மாண்ட்ரியல் நெறிமுறையின்படி, ஓசோனை பாதிக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் இராசயனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதும், அந்த இரசாயனங்கள் மற்றும் பொருட்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு  அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கத் தொடங்கின.

இந்த மாண்ட்ரியல் நெறிமுறையின் படி ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கியதன் பயனாக, கொஞ்சம் கொஞ்சமா தன்னைத் தானே ஓசோன் படலம் சீரமைத்து கொண்டுள்ளது. 

தற்போது இருப்பதைப் போலவே, அனைத்து நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைத்தால் அடுத்த 40 ஆண்டுகளில் ஓசோன் படலம் முழுமையாகக் குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பும் எனத் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

1987-இல் மாண்டரியில் நெறிமுகை கையழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு ஓசோன் படலம் குறித்தும் அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் குறித்தும் உணர்த்த, 1994-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதியை சர்வதேச ஓசோன் தினமாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இந்நிலையில், பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980-களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதர்களுக்கு ஏற்படும் தோல் புற்றுநோய், கண்புரை உள்ளிட்ட அபாயங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The ozone layer is recovering from the hole


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->