‘லவ் டுடே’ ஹீரோ மீண்டும் டபுள் ரோல்…! பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் நடிகர் + இயக்குநர்...!
Love Today hero double role again Pradeep Ranganathan star director next film
‘கோமாளி’ மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக மாறி தமிழ் சினிமாவில் தனித்த அடையாளம் பதித்தார். இளம் தலைமுறையை கவர்ந்த அந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மெகா ஹிட்டானது.
அதனைத் தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை கடந்ததால், பிரதீப்பின் வெற்றி தொடர்ச்சியாக நீடித்தது.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIC) படத்தில் பிரதீப் நடித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்துள்ள இந்த படம் வருகிற 18-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இதற்கிடையில், அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளன.
பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் தானே நடித்து, தானே இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் அர்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
இந்த படம் முழுக்க விறுவிறுப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் என்றும், 2026-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே பிரதீப்பின் அடுத்த கட்ட பயணத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
English Summary
Love Today hero double role again Pradeep Ranganathan star director next film