மாணவனை தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ: இந்த உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார்? பாஜக நயினார் கடும் கண்டனம்!
BJP Nainar nagendran condemn to islam teacher
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதரஸா பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசும் காணொளி வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
காணொளியைப் பார்த்த பின், "படிக்க வந்த சிறுவனைத் தூக்கியெறியும் அளவிற்கு அப்படி என்ன தவறு நிகழ்ந்தது? மதபோதனைக்காக வந்த சின்னஞ்சிறு மாணவர்களை இப்படி அடித்து உதைக்கும் உரிமை யார் அளித்தது? இது போல எத்தனை மதப் பள்ளிகளில் நம் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர்?" போன்ற எண்ணிலடங்காத கேள்விகள் மனதைத் துளைக்கின்றன.
மதச்சார்பின்மையின் பாதுகாவலராகவும் தமிழகப் பிள்ளைகளின் "அப்பா" என்றும் தம்மை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மதரஸா பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Nainar nagendran condemn to islam teacher