அரசியலில் பரபரப்பு! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திடீர் கைது!
BJP leader HRaja arrested in Trichy
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதான தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
அந்த மாநாட்டில் தமிழ்நாடு இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்ட நிலையில் அவர் முன்னிலையில் சாதன தர்மம் குறித்து உதயநிதி பாஸ் பேசும் போது தடுக்காமல் மௌனம் காத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.

சனாதான தர்மத்தை உதயநிதி இழிவாக பேசும் போது அது தடுக்காமல் அமைதி காத்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் அவ்வாறு விலக விட்டால் தமிழ்நாடு முழுவதும் சேகர்பாபுவை கண்டித்து செப்டம்பர் 11ஆம் தேதி பாஜகவினர் போராட்டம் நடத்துவார்கள் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று தமிழக முழுவதும் பாஜகவினர் சார்பில் அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அது ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எச்.ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
BJP leader HRaja arrested in Trichy