யாரைக் காப்பாற்ற, எதை மூடி மறைக்க...! இருவேறு சம்பவங்கள்.. கொந்தளிக்கும் அண்ணாமலை!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin DMK MLA Kathiravan
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ, கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார்.
ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கும் லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டுள்ளார் திருப்பத்தூரில் உள்ள அனைத்து சிறுநீரகங்களையும் அகற்ற வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்.
இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன. மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்.எல்.ஏ.வே ஒப்புக்கொள்கிறார்.
ஆனாலும், தி.மு.க. அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவரின் ஒரு செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அரசு நிதி உதவி பெறும் டொமினிக் சேவியர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவர் முகிலன் காணாமல் போன நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, பூட்டப்பட்டிருந்த பள்ளி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், மாணவர் முகிலனின் மர்ம மரணம் தொடர்பாக, இரண்டு வாரங்கள் கடந்தும், இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாணவர் முகிலன் இறப்பு தொடர்பான வழக்கை, அப்படியே மூடிப் புதைக்கும் பணியில் மாவட்டக் காவல்துறை ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதனைக் கண்டித்தும், மாணவர் முகிலன் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் கைது செய்து, அவர்களில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் திரு. விவேகானந்தன் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மூன்று பேரைச் சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.
பூட்டியிருந்த கிணற்றில் இருந்து கிடைத்த பள்ளி மாணவனின் உடல் குறித்து இரண்டு வாரங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் காவல்துறை, விசாரணை கோரிப் போராட்டம் நடத்தும் பொதுமக்களைக் கைது செய்திருப்பது, யாரைக் காப்பாற்ற, எதை மூடி மறைக்க என்ற கேள்விகளை எழுப்புகிறது.
உடனடியாக, மாணவர் முகிலன் மரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணை கோரிப் போராடியதால் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin DMK MLA Kathiravan