50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாயகன்...!
kamal hasan congratulates Rajini on completing 50 years
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு, நடிகரும், எம்.பி.யுமான 'கமல்ஹாசன்' வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக வளம் வரும் ரஜினிகாந்த், வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
இதுவரை அவர் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.குறிப்பாக 'கூலி' அவரது 171-வது திரைப்படமாகும்.இந்த சூழ்நிலையில்,ரஜினிக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் இதயங்கனிந்த வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த முறையில் ,நண்பர் கமல்ஹாசன் அவர்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது,"திரைத்துறையில் 50 வருடங்கள் நிறைவு செய்யும் நமது சூப்பர் ஸ்டாரை நான் பாசத்துடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன்.
இந்தப் பொன் விழாவிற்கு ஏற்ற உலகளாவிய வெற்றியை 'கூலி' திரைப்படம் பெற வாழ்த்துகிறேன் '' என்று தெரிவித்திருக்கிறார்.
English Summary
kamal hasan congratulates Rajini on completing 50 years