சூப்பர்! கூலி பட இடைவெளியின் போது மதராஸி பட கிளிம்ஸ் வீடியோ...!
Madarasi film clips video during Coolie film break
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் ''கூலி''.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.இந்தநிலையில் திரையரங்குகளில் படத்தின் இடைவேளையின் போது விளம்பரங்கள் மற்றும் புதிய படத்தின் டிரெய்லர்கள் காட்சிப்படுத்துவது வழக்கமான ஒன்று.
அவ்வகையில் கூலி படத்தின் இடைவேளையின் போது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருக்கிறது.
English Summary
Madarasi film clips video during Coolie film break