நெல்லை || சபாநாயகர் அப்பாவு காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நடந்தது என்ன?
peoples blocked assembly speaker appavu car in nellai
நெல்லை மாவட்டத்தில் தமிழக சட்டசபைத் தலைவர் அப்பாவு காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு ரூ.423 கோடி மதிப்பீட்டில், 12,000 வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க திசையன்விளை பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அவரது காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டுனர். மேலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதாவது முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றுக் கூறி காலி குடங்களுடன் திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
peoples blocked assembly speaker appavu car in nellai