அசாத்திய திறமையால் திரையுலகில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமலஹாசன்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகிற்கு நுழைந்து தன் பயணத்தை தொடங்கி இன்றோடு 65 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் உலகநாயகன் ''கமல்ஹாசன்'' . சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையில் தோன்றினார்.

அன்று முதலே கமல்ஹாசன் அவர்களுக்கு படத்திலேயே சாவித்ரி,ஜெமினிகணேசன், மனோரமா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அறிய வாய்ப்பு கிட்டியது .படத்தில் காண்போரின் இதயத்தை மட்டுமல்லாது, தேசிய விருதையும் பெற்று பெற்றோர்க்கு பெருமை சேர்த்தார்.

இவர் திரையுலகில்  நடிப்பு, நடனம், பாடல், தயாரிப்பு, அரசியல் என பல்வேறு துறைகளிலும் தனக்கென தனித்தன்மையுடன் ஜொலித்துவருகிறார் கமல்ஹாசன்.இவர் தனது 5 வயதில் நடிக்கத் தொடங்கி  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி எனப் பல மொழிகளில் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் பெருமையை இன்று திரையுலகமே அசந்து பார்க்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan who completed 65 years film industry incredible talent


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->