ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு..! - Seithipunal
Seithipunal


சாவர்க்கர் அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின் போது  தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-இல் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் சுதந்திர போராட்ட வீரர், சாவர்க்கரை விமர்சித்து பேசியிருந்த நிலையில், ராகுலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சாவர்க்கரின் உறவினர் சத்யாகி என்பவர் வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பாக ராகுல் தரப்பு வக்கீல் மிலிந்த் பவார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பாஜ தலைவர் ஆர்என் பிட்டு என்பவர் ராகுலை பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளதாகவும்,.அதேபோல, மற்றொரு பாஜ தலைவர் தர்வீந்தர் மர்வாவும் ராகுலுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி, அவருக்கும் நடக்கும் என்று எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் ராகுலுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே, ராகுலுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டியது மாநில அரசின் கடமை, என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi has filed a petition in the court seeking security alleging that his life is in danger


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->