காட்டுப்பன்றி தாக்கி மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு - திருச்சியில் பரபரப்பு.!!
Marxist Party executive died in trichy
திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை கடித்துக் குதறியது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காட்டு பன்றியை விரட்டி விட்டு பலத்த காயமடைந்த சகாதேவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த அன்று மாலை உத்தமர்சீலியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவரான கணபதி என்பவர் தனது வாழைத்தோப்புக்கு சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி அவரையும் கடித்துக்குதறியது. இதிலும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கணபதியின் உடலை மெட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அதனால் கணபதி உடலை வாங்க மறுத்து இன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சகாதேவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு பேர் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Marxist Party executive died in trichy