டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 - மறுத்தேர்வு நடத்தக் கோரி சென்னையில் போராட்டம்.!!
examiners protest in chennai for group 4 re exam
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் கிராம நிர்வாக அலுவலர், வனவர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பதவி்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை மொத்தம் 11,48,019 பேர் எழுதியுள்ளனர். ஆனால், இந்தத் தேர்வில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள், தேர்வுக்கான பாடத்திட்டத்தை தாண்டி கேட்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
மேலும், மறுதேர்வு குறித்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. முடிவெடுத்து அறிவிக்காவிட்டால், இந்த மாத இறுதியில் மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
English Summary
examiners protest in chennai for group 4 re exam