33 வீரர்களுக்கு மொத்தம் ரூ.43.20 இலட்சம் மதிப்பில் காசோலை வழங்கிய துணை முதலவர்!
DyCM Udhay sports
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிலிருந்து 7th World Cup Carrom போட்டியில் பங்கேற்கவுள்ள மூன்று விராங்கனைகளுக்கு தலா ரூ1.50 இலட்சம்,
World Ability Sports Games 2025-ல் பங்கேற்கவிருக்கும் 22 மாற்றுத்திறன் வீரர் – வீராங்கனையருக்கு தலா ரூ 1.65 இலட்சம்,
பல்வேறு தடகள போட்டிகளில் சாதனைப் படைத்துள்ள வீரர் – வீராங்கனையர் 8 பேருக்கு தலா ரூ.30,000 மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள்,
இப்படியாக மொத்தம் 33 வீரர்களுக்கு மொத்தம் ரூ.43.20 இலட்சம் மதிப்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து காசோலைகளை இன்றைய தினம் வழங்கினோம்.
நிதி பங்களிப்பைப் பெற்றுள்ள நம் வீரர்களின் வெற்றி இன்னும் பலருக்கு வழிகாட்டட்டும். விளையாட்டை நோக்கி வரும் இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்" என்று தெரிவித்துள்ளார்.