ஐட்டம் பாட்டில் ஆட்டம் போடும் ஜோவிகா விஜயகுமார்..வெடிய போடு பாடலில் கேமியோ டான்சராக களமிறக்கம்! வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் தமிழ் சீசன் 7 மூலம் பிரபலமான ஜோவிகா விஜயகுமார், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பிக் பாஸில் தன்னுடைய தைரியமான பேச்சு, செயல்கள் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜோவிகா சினிமா துறையில் தன்னை நிலைநிறுத்தும் நோக்கில், இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். மேலும், பிக் பாஸில் பங்கேற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி “மிஸ்டர் அண்ட் மிசஸ்” என்ற படத்தை தயாரித்தும், கதையை எழுதியும், நடித்தும், இயக்கியும் இருந்தார். ஆனால், அந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

மேலும், இசைஞானி இளையராஜா பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாகக் கூறி, அவரின் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜோவிகா மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களும் வீடியோக்களும் பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரு பாடலில் உற்சாகமாக நடனம் ஆடுவது தெளிவாகக் காணப்படுகிறது.

அதுவும் சாதாரண பாடல் அல்ல — “வெடிய போடு” புரோமோ பாடல்!அதில் கேமியோ டான்சராக ஜோவிகா கலக்கவிருக்கிறார். இதை அவர் தானே விளக்கமாக கூறியுள்ளார். மேலும், அந்த பாடலுக்கான நடனத்தைக் கற்றுக் கொடுத்த பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு நன்றி தெரிவித்தும், மொத்த குழுவினருக்கும் நன்றியை பகிர்ந்தும் இருந்தார்.

ஜோவிகாவின் இந்தப் போஸ்ட் சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து, “சினிமாவில் முழுமையாக நடிகையாகவும் வர வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதேசமயம் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் —“நீங்கள் ஹீரோயினாக அறிமுகமாகப்போகிறீர்கள் என்று நினைத்தோம்... ஆனால் ஐட்டம் பாடலில் கேமியோவா?” என்று சிலர் ஆச்சரியப்பட்டுள்ளனர். மேலும், சிலர் “கேமியோ என்றால் அதிர்ச்சி கொடுக்க வேண்டியது... அதை இன்ஸ்டாகிராமில் முன்னமே சொல்லிட்டீங்களே?” என்று கிண்டலாகக் கருத்து கூறியுள்ளனர்.

எப்படியாயினும், பிக் பாஸிலிருந்து சினிமா வரை தனது முயற்சியை விடாமல் தொடர்ந்து முன்னேறி வரும் ஜோவிகா விஜயகுமார், இப்போது “வெடிய போடு” பாடலின் மூலம் திரை உலகில் மீண்டும் காலடி வைக்கிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jovika Vijayakumar who is dancing in the item bottle debuts as a cameo dancer in the song Vediya Podu Information released


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->