பனையூரில் பதுங்கிக்கொண்டாரா விஜய்? நடிகர் சூரி அப்படி விமர்சனம் செய்தாரா? உண்மை என்ன?
actro soori say about tvk vijay fake news
"பேரழவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார்" என்று நடிகர் சூரி பேட்டி அளித்துள்ளதாக சமூகவலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் ஒரு செய்தி பரவி வந்தது.
இது முற்றிலும் பொய்யான செய்தி என்று மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் சூரி, "தம்பி, தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்கு தீங்கையே தரும்.
ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம்.
இந்த சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது,
அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள்.
எனக்கும் பல வேலைகள் உள்ளன, உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செலுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
actro soori say about tvk vijay fake news