நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தொடக்கம்; வரும் 27-ஆம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Official announcement on the 27th regarding the commencement of special revision work of the electoral roll across the country
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையகம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 09-ஆம் தேியன்று ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை அக்டோபரில் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
அதன்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த முறை நடந்த திருத்தப் பணிகளின் தகவல்கள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று ( அக்டாபர் 23) வெளியான தகவலில் படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடங்குவதற்கான அறிவிப்பு வரும் 27-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அப்போது பல்வேறு கட்டங்களாக இப்பணியை மேற்கொள்வது குறித்தும், முதற்கட்ட பணிகள் வரும் நவம்பர் 01-ந் தேதி முதல் தொடங்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Official announcement on the 27th regarding the commencement of special revision work of the electoral roll across the country