"வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம்": ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அழுத்தம் குறித்து சிதான்ஷு கோட்டக் விளக்கம்!
India vs Zimbabwe Batting Coach Kotak Acknowledges High Pressure in Must Win Super 8 Clash
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற, நாளை (பிப். 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா கண்டிப்பாக வென்றாக வேண்டும்.
இந்த இக்கட்டான சூழல் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்தாவது:
இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால், ரசிகர்கள் மற்றும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு இந்திய வீரர்கள் மீது ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை (Pressure) உருவாக்கியுள்ளது. சர்வதேசக் கிரிக்கெட்டில், குறிப்பாக உலகக் கோப்பைத் தொடரில் அழுத்தம் என்பது தவிர்க்க முடியாதது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பேட்டர்களுக்கு இடையே முறையான பார்ட்னர்ஷிப் அமையாததே தோல்விக்குக் காரணம். இது குறித்துப் பலரும் பேசி வருவதால், வீரர்கள் தங்களைச் சீரமைத்துக் கொண்டு விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்திய வீரர்கள் இத்தகைய அழுத்தமான சூழலைத் திறம்படக் கையாண்டு விளையாடக் கூடியவர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
"உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், இந்த அழுத்தத்தைத் திறம்பட எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம்".
நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் அமையும் பட்சத்தில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
India vs Zimbabwe Batting Coach Kotak Acknowledges High Pressure in Must Win Super 8 Clash