தேவாவுடன் இசை பயணத்தில் துணைநின்ற சபேஷ் மறைவு...! - திரையுலகம் இரங்கல் மழையில்...!
Sabesh who supported Deva on her musical journey passes away film industry mourning
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான மெட்டுகளால் ரசிகர்களின் மனதை வருடிய இசை இயக்குனர் தேவாவின் குடும்பம் இன்று துயரத்தில் மூழ்கியுள்ளது. தேவாவின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் இன்று காலமானார்.
பல வருடங்களாக திரைப்பட இசை உலகில் முக்கிய பங்களிப்பு ஆற்றிய சபேஷ், தனது சகோதரர் முரளி உடன் இணைந்து “சபேஷ்-முரளி” என்ற பெயரில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதே நேரத்தில், தேவாவின் பல திரைப்படங்களில் இசை உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது மறைவுச் செய்தி திரைப்படத் துறையையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.‘சமுத்திரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சபேஷ்.
குறிப்பாக, பழமையான நாட்டுப்புறத் தாளங்கள் மற்றும் புது தலைமுறை இசையை இணைக்கும் திறமையால் அவர் பாராட்டப்பட்டார்.மேலும் சமீபத்தில், தனது சகோதரர் தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து சபேஷ் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருந்தது ரசிகர்களின் நினைவில் இன்னும் நினைவாக உள்ளது.இந்த திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
English Summary
Sabesh who supported Deva on her musical journey passes away film industry mourning