கரூர் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் சமர்ப்பித்த சிபிஐ!
karur case CBI submitted FIR Karur court
கரூரில் விஜய் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களைச் சுற்றிய விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ குழுவினர், வியாழக்கிழமை காலை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் தங்களது முதல் அறிக்கையை நீதிபதி பரத் குமார் முன் தாக்கல் செய்தனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமி புரத்தில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பெரும் சர்ச்சையையடுத்து, உச்சநீதிமன்றம் ஒருநபர் ஆணையம் மற்றும் மாநில சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை ரத்து செய்து, சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட சிபிஐ குழு கடந்த 15ஆம் தேதி கரூர் வந்து விசாரணை தொடங்கியது. குழுவினர், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, வனத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தினர்.
இதேநேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவில், ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண் மற்றும் சோனல் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அல்லது நாளை கரூர் வரி சிபிஐ விசாரணையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய உள்ளனர்.
English Summary
karur case CBI submitted FIR Karur court