திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை... விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி! - Seithipunal
Seithipunal



நடிகர் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றிக்கு பிறகு, தற்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூரி தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில் அவர், “எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி” என எழுதினார். ரசிகர்கள் பலரும் அன்புடன் வாழ்த்தியிருந்த நிலையில், ஒருவரோ “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என கிண்டல் பதிவிட்டார்.

அந்த கருத்துக்கு சூரி அமைதியான ஆனால் ஆழமான பதில் அளித்தார். “திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான். அந்த பாதைகள்தான் வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னை தேடி வரும்,” என பதிலளித்தார்.

சூரியின் இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் நகைச்சுவை நடிகராக தன் பயணத்தைத் தொடங்கி, தற்போது முக்கிய கதாநாயகனாக உயர்ந்த சூரி, தனது வெற்றியைத் தாழ்மையுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த அணுகுமுறையால் ரசிகர்களின் மனதில் மேலும் இடம் பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Soori Diwali post


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->