திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால்... திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
VCK Thirumavalavan say about DMK Alliance
செங்கல்பட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால் நம்மை விமர்சிக்க யாருக்கும் தேவையில்லை, அதற்குப் பிறகு விமர்சனங்களும் நிற்கும் எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: “திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகினால், நம்மை இலக்காக வைத்து யாரும் பேச மாட்டார்கள். நம்மை குறிவைத்து தாக்குவதற்கான காரணமே இல்லாமல் போய்விடும். அவர்களின் திட்டமும் அதனுடன் முடிவடையும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக பக்கம் போகவில்லையே, பாஜகவுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லையே என்பதுதான் இன்று நம்மீது எழும் விமர்சனங்களுக்குக் காரணம். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து எதிர்த்து பேசும் ஒரே அரசியல்வாதி திருமாவளவன் என்பதே சிலருக்கு சங்கடமாக உள்ளது.
நாம் சனாதன எதிர்ப்பை வெளிப்படையாகக் கூறி, சமூக நீதி கொள்கையை வலியுறுத்தி வருகிறோம். திமுக கூட்டணியை நிலைத்திருக்கச் செய்யும் உறுதுணையாக விசிக செயல்படுகிறது என்பதுதான் சிலருக்கு பிரச்னையாகியுள்ளது,” என்றார்.
English Summary
VCK Thirumavalavan say about DMK Alliance