800 கோடி பட்ஜெட் படத்தில் பூஜா ஹெக்டே! அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் பூஜா ஹெக்டே ரீ-என்ட்ரி!5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளமா?
Pooja Hegde in an 800 crore budget film Pooja Hegde re enters the Allu Arjun Atlee alliance Is she getting 5 crores for a 5 minute song
தொடர் தோல்விகளால் ‘ராசியில்லாத நடிகை’ என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த பூஜா ஹெக்டே, தற்போது மீண்டும் தன் கேரியரை எழுப்பும் அதிரடியான வாய்ப்பைப் பெற்றுள்ளார். 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் அவர் இடம் பிடித்திருப்பது தற்போது டாலிவுட் முழுவதும் பேசப்படும் விஷயமாகியுள்ளது.
ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவின் ஸ்டார் ஹீரோயினாக வலம் வந்த பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுன், என்.டி.ஆர், பவன் கல்யாண், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அல வைகுந்தபுரமுலூ, துவ்வாட ஜெகந்நாதம் போன்ற சூப்பர்ஹிட் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் அதற்குப் பிறகு தொடர்ச்சியான தோல்விகள் அவரை சினிமாவில் பின்தள்ளின.
“பூஜா இருந்தா படம் ஓடாது!” என்ற வகையிலான விமர்சனங்கள் பரவி, பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் பூஜா ஹெக்டே தனது கேரியரில் பெரும் சரிவை சந்தித்தார். இருப்பினும், சமீபத்தில் வெளியான கூலி படத்தின் மோனிகா பாடல் அவருக்கு மீண்டும் ஒரு பெரும் ரீஎன்ட்ரியாக அமைந்தது. அந்த பாடலில் பூஜா ஆடிய நடனம் ரசிகர்களிடையே வைரலாகி, படத்தின் வசூலுக்கும் பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது.
அந்த வெற்றியின் அடிப்படையில், தற்போது பூஜாவிடம் பல ப்ராஜெக்டுகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமானது, அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய AA22xA6 படம்.
இந்த பிரம்மாண்ட சயின்ஸ்-ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் சுமார் ₹800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இந்த ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்போது அந்தப் படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெறவுள்ளது. அந்த பாடலுக்காகவே பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக பூஜாவுக்கு ₹5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுனுடன் இது பூஜா ஹெக்டேவின் மூன்றாவது கூட்டணி ஆகும். ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த துவ்வாட ஜெகந்நாதம் மற்றும் அல வைகுந்தபுரமுலூ படங்கள் மாபெரும் ஹிட்டாகியுள்ளன. எனவே, இந்த முறை அவர்களின் காம்போ மீண்டும் பாக்ஸ் ஆபிஸை கலக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஆறு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் தற்போது பரவலாக பேசப்படுகின்றன.
பூஜா ஹெக்டேவின் சிறப்பு பாடல் குறித்து தயாரிப்பு குழுவின் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால் பூஜா பாசிட்டிவாக பதிலளித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூஜா ஹெக்டேக்கு இது ஒரு மிகப்பெரிய திரும்பி வருகையாக அமைந்தால், டாலிவுட் மட்டுமின்றி பான்-இந்தியா அளவிலும் மீண்டும் ஸ்டார் ஹீரோயினாக உயர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Pooja Hegde in an 800 crore budget film Pooja Hegde re enters the Allu Arjun Atlee alliance Is she getting 5 crores for a 5 minute song