அப்பா போல மகனும்!-துருவ் விக்ரம் பைசன் பயிற்சி வீடியோவால் பெருமிதம் கொண்ட தந்தை...!
Like father like son Proud father Dhuruv Vikrams bison training video
தமிழ் திரைப்பட உலகின் சக்திவாய்ந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிகரம் விக்ரம், தனது ஆரம்ப காலங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தனித்த அடையாளத்தை தந்த படம் “சேது” தான். அந்த படத்தில் விக்ரம் வெளிப்படுத்திய ஆழமான நடிப்புத் திறன், தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது.

அதன்பின், வித்தியாசமான கதாபாத்திரங்கள், மாற்றமடைந்த தோற்றங்கள், உழைப்பை விடாமுயற்சியுடன் இணைத்த நடிப்பு மூலம் விக்ரம் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்த படத்திற்காக தன்னைக் முழுமையாக அர்ப்பணித்து, கதாபாத்திரத்தை நிஜமாக்கும் முயற்சியில் எப்போதும் முன்நிலையிலிருப்பவர் விக்ரம்.
“கடின உழைப்பு” என்ற வார்த்தைக்கு நிகரான நடிகர் என்று சொல்லலாம்.இந்நிலையில், தன்னுடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள “பைசன்” திரைப்படத்திற்காக அவர் மேற்கொண்ட தீவிர பயிற்சியின் வீடியோவை விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் அடைந்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. “புலிக்கு பிறந்தது பூனை அல்ல, இன்னொரு புலிதான்!” என்ற தலைப்பில் ரசிகர்கள் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தை போலவே மகனும் கதாபாத்திரத்திற்காக உழைப்பை ஒட்டுமொத்தமாக செலுத்தியிருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
English Summary
Like father like son Proud father Dhuruv Vikrams bison training video