ரூ 2000 கோடி.. 1250 வீடுகள்.. திமுக அரசு ஊழல் - அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
arapoir iyakkam dmk govt pallikaranai scam
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சட்டவிரோத சுற்றுசூழல் மற்றும் கட்டுமான அனுமதி கொடுத்து திமுக அரசு ஊழல்!
சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக வழங்கி அந்த பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமம் துறையும் செய்துள்ளது.
இந்த ஊழல் பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், தலைமை செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை என பத்து சம்பந்தப்பட்ட துறை பொது ஊழியர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது.
ராம்சார் நிலத்தில் ரியல் எஸ்டேட் செய்ய முதலீடுகள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தமா ? முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்? வீடியோவை பாருங்கள்! என்று தெரிவித்துள்ளது.
English Summary
arapoir iyakkam dmk govt pallikaranai scam