அரசு அலட்சியம்! தார்ப்பாயால் மூடிய நெல் மூட்டைகள்... இதுவே திராவிட மாடலா?” – சீமான் கேள்வி
Government negligence Paddy bundles covered with tarpaulin Is this Dravidian model Seeman questions
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திப்பதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது,"கனமழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெருநட்டத்தை சந்திக்கின்றனர்.

அதோடு, ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகளையும் திமுக அரசு சரியான நேரத்தில் கொள்முதல் செய்யாததால், அவை முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.விவசாயிகள் ரத்தம் சிந்தி விளைவித்த நெல்மணிகளுக்கு நியாயமான விலை கூட வழங்காத திமுக அரசு, இப்போது அதையும் தாமதப்படுத்தி அவர்களை வறுமையில் தள்ளுகிறது.
அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் நெல் மூட்டைகள் முதலில் கொள்முதல் செய்யப்பட, ஏழை விவசாயிகள் பின்னால் தள்ளப்படுவது அவலம்.பல்லாயிரம் கோடி ரூபாயில் அரங்குகள், பந்தயங்கள், சமாதிகள் கட்டும் அரசு, விவசாயிகளுக்காக ஒரு சேமிப்பு கிடங்கும் கட்டாதது வெட்ககரமானது.
நெல் மூட்டைகளை தார்ப்பாய்களால் மூடி மழையிலிருந்து காக்கும் நிலை, இதுவே திமுகவின் ‘திராவிட மாடலா?’உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழித்து, விவசாயிகளுக்கு நேர்மையான விலையிலும் இழப்பீட்டையும் வழங்க வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Government negligence Paddy bundles covered with tarpaulin Is this Dravidian model Seeman questions