தெலுங்கானா ஜூபிலி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தல்: 130 பேர் மனுக்கள் தள்ளுபடி; 81 மனுக்கள் ஏற்பு..!
130 petitions rejected and 81 accepted for Telangana Jubilee Hills constituency by election
தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பர் 11-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாரத ராஷ்டிர சமிதி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. கோபிநாத்தின் மனைவி சுனிதா போட்டியிடுகிறார்.
அங்கு பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்ய குவிந்துள்ளனர். இதனால், நள்ளிரவைத் தாண்டியும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதோடு, சிலர் இருமுறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 81 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதோடு, 130 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தேதியாகும்.
English Summary
130 petitions rejected and 81 accepted for Telangana Jubilee Hills constituency by election