அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்த் சர்மா..?
Will Suryakanth Sharma be the next Chief Justice of the Supreme Court
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி கவாய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பிஆர் கவாய் மே 14 அன்று பதவியேற்றார். இவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் புதிய தலைமைய நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இதன்படி மூத்த நீதிபதியான சூரியகாந்த் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும், இவரது பெயரை ஒய்வு பெற உள்ள பி.ஆர். கவாய் முறைப்படி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யகாந்த் சர்மா (Surya Kant Sharma) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். மூத்தவர் என்ற மரபு பின்பற்றப்படும் போது, இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சர்மா இருப்பார். நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, ஒரு மூத்த வழக்கறிஞராக இருந்துள்ளார். மேலும் அரியானா அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
English Summary
Will Suryakanth Sharma be the next Chief Justice of the Supreme Court