தமிழகத்தில் திடீர் மின்சார கட்டண உயர்வா? உண்மை என்ன?!
TNGovt EB Bill
மின்சார வாரியங்களின் நிதிநிலைச் சீர்திருத்தத்திற்காக ஒவ்வொரு மாநில ஒழுங்குமுறை ஆணையமும் அவ்வப்போது மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு வருடந்தோறும் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் திடீரென அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிலர், மின்சார கணக்கீடு செய்யும் ஊழியர்கள் தாமதமாக வருவதால் 500 யூனிட்டுக்குக் கீழே இருந்த பயன்பாடு அதிகமாக கணக்கிடப்பட்டு, உயர்ந்த கட்டணத்திற்கு வழிவகுக்கிறது என குற்றம் சாட்டினர். 500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் கட்டணம் திடீரென உயரும் நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மின்வாரிய உயர் அதிகாரிகள் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விளக்கமளித்தில். “மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை வீட்டு மின்சாரக் கட்டண உயர்வு குறித்து எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதேசமயம் இலவச மின்சாரச் சலுகை தொடர்கிறது. எனவே, பொதுமக்கள் கூறும் போல் கட்டண உயர்வு ஏற்படவில்லை,” என தெரிவித்தனர்.
ஆனால் சில இடங்களில் மின்சார மீட்டர் கணக்கீடு தாமதமாக நடைபெறுவதால் தொகை அதிகமாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தற்போது 60 நாட்களுக்கு 400 யூனிட்டுக்கு ரூ.4.95 முதல், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.