தென் கொரியாவில் ஆசிய உச்சி மாநாடு, அமெரிக்கா-சீனா தலைவர்கள் முக்கிய சந்திப்பு!
Asia Summit in South Korea US China leaders hold important meeting
தென் கொரியாவில் 29-ந் தேதி ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து உரையாற்ற உள்ளார்.
மறுநாள் (30-ந் தேதி) அவர் சீன அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து முக்கிய வர்த்தக விவகாரங்களை பேச்சு செய்வார் என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

டிரம்ப் இன்று இரவு மலேசியாவுக்கு புறப்பட்டு, பின்னர் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்கா-சீனா வர்த்தக போரின் நடுப்பகுதியில் இரு தலைவர்கள் சந்திப்பது அரசியல் மற்றும் பொருளாதார ரணகளத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
English Summary
Asia Summit in South Korea US China leaders hold important meeting