கோலிவுட் கலக்கம்! 'அப்பா கமலின் படத்தில் நடிக்கப் போகிறார்...' - மகள் சவுந்தர்யா உடைத்து பேசிய உண்மை
Kollywood turmoil Father going act Kamals film truth revealed by daughter Soundarya
தமிழ் திரைத்துறையின் இரண்டு மகத்தான நாயகர்கள் 'ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்', ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக ரசிகர்களின் கனவாக இருந்த இந்த கூட்டணி, இப்போது நனவாகும் தருணத்தில் உள்ளது.

இந்த மல்டிஸ்டாரர் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவரம் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகம் முழுவதும் எதிர்பார்ப்பு உச்சத்தில் திளைக்கிறது.இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு விருது விழாவில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த திட்டத்தை உறுதிப்படுத்தினார்.
அவர்,“கமல்ஹாசன் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் அப்பா (ரஜினி) நடிக்கப் போகிறார். சரியான நேரத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்பாவே வெளியிடுவார்”என்றார்.
அந்தவேளையில் மேடையில் இருந்த ஸ்ருதி ஹாசன் கூட தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி,“நாங்களும் அவர்களை ஒரே திரையில் காண ஆவலாக காத்திருக்கிறோம். ரசிகர்களைப்போலவே நாங்களும் அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
English Summary
Kollywood turmoil Father going act Kamals film truth revealed by daughter Soundarya