பாகுபலி முதல் கல்கி வரை — பிரபாஸ் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்.. வெறும் 4 படங்களில் 4000 கோடி வசூலா? - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரைப்பட உலகின் பாகுபலி ஹீரோ பிரபாஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, அவர் இதுவரை நடித்த படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களையும் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தையும் பார்க்கலாம்.

முதலில், “பாகுபலி 2 : தி கன்க்ளூஷன்” — எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்த பிரம்மாண்ட படம் 2017ல் வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம். இந்த படம் உலகளவில் ரூ. 1788.06 கோடி வசூல் செய்து, பிரபாஸின் ஆல் டைம் ஹிட் படமாகும்.

அடுத்து, “கல்கி 2898 AD” — நாக் அஸ்வின் இயக்கிய இந்த சைஃபை மாஸ்டர் பீஸ் 2024ல் வெளியாகி ரூ. 1042.25 கோடி வசூலித்தது. அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் போன்ற பெரிய ஜாம்பவான்கள் இணைந்திருந்த இந்த படம், பிரபாஸின் இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட்.

மூன்றாவதாக, “பாகுபலி : தி பிகினிங்” — 2015ல் வெளிவந்த இப்படம், பிரபாஸின் கெரியரை மாற்றிய அதிரடி படம். தமன்னா, ராணா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் உலகளவில் 650 கோடி வசூலித்தது.

நான்காவதாக, “சலார்” — கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2023ல் வெளியான இப்படம், ரூ. 617.75 கோடி வசூலித்தது. பிரபாஸ், பிருத்விராஜ், சுருதி ஹாசன் நடித்த இந்த படம் ஒரு பெரிய வெற்றி.

ஐந்தாவதாக, “சாஹோ” — 2019ல் வெளியான இந்த ஆக்ஷன் திரில்லர் ரூ. 451 கோடி வசூலித்தது. ஆனால் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக இது ஒரு பிளாப் படமாகவே அமைந்தது.

அடுத்து, “ஆதிபுருஷ்” — 2023ல் வெளியான இப்படம் ரூ. 393 கோடி வசூலித்தாலும், மிகப்பெரிய பட்ஜெட்டால் தோல்வியை சந்தித்தது.

ஏழாவதாக, “ராதே ஷ்யாம்” — 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 149.5 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டராக மாறியது.

அடுத்ததாக, “மிர்ச்சி” — 2013ல் வெளியான இந்த ஆக்ஷன் படம் ரூ. 83.4 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஒன்பதாவதாக, “மிஸ்டர் பெர்ஃபெக்ட்” — 2011ல் வெளியான இப்படம் ரூ. 48.2 கோடி வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது.

இறுதியாக, “ரெபெல்” — ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வந்த இந்த படம் ரூ. 46.8 கோடி வசூலித்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பாகுபலி தொடங்கி கல்கி வரை, பிரபாஸ் தனது கெரியரில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேன் பேஸைக் கொண்ட நட்சத்திரமாக திகழ்கிறார். ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மழையாக தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From Baahubali to Kalki Top 10 highest grossing films starring Prabhas 4000 crores in just 4 films


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->