'ஹமாஸ் அமைப்பினரால் இனிமேல் காசாவை நிர்வகிக்கவே முடியாது': மார்கோ ரூபியோ எச்சரிக்கை..!
Marco Rubio warns Hamas will no longer be able to govern Gaza
'ஹமாஸ் அமைப்பினரால் இனிமேல் காசாவை நிர்வகிக்கவே முடியாது, அவர்கள் ஆயுதங்களை கட்டாயம் கீழே போட வேண்டும்.' என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 'ஹமாஸ் தொடர்ந்த அச்சுறுத்தி வந்தால், அவர்களுக்கு எதிராக மீண்டும் போர் தொடங்க, இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுமா..? என்பதை இப்போது கூற முடியாது.' என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்திற்கு பிராந்திய அளவில் ஆதரவு இருக்கிறது. இந்த திட்டம் சிறந்த ஒன்று. டிரம்புக்கு வேறு மாற்றுத்திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகள் தான் வகுக்க வேண்டும் என்றும், இதில் ஹமாசை சேர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ராணுவமயமாக்கலை ஹமாஸ் மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று பேசியுள்ளார்.
எனவே அதை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் இது ஒரு ஒப்பந்தம், அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், இஸ்ரேல் உறுதிமொழிகளை அளித்துள்ளது. காசா மக்கள் ஹமாஸ் இயக்கத்தால் அச்சப்படாமல் இருக்க, அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற நாங்கள் உதவ விரும்புகிறோம் என்றும் மார்கோ ரூபியோ பேட்டியளித்துள்ளார்.
English Summary
Marco Rubio warns Hamas will no longer be able to govern Gaza