கொள்ளையடித்து வாழும் கோபாலபுர குடும்பத்தின் குடுமி இந்த டாஸ்மாக் கையில்... ஹெச்.ராஜா கடும் விமர்சனம்!
BJP H Raja Say About DMK MK Stalin TASMAC
பாஜக ஹெச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சூரியன் வழுக்கி சாராயத்தில் விழுந்தது!
சர்வதேச முதலீடுகள், வேலைவாய்ப்புகள், வலுவான உட்கட்டமைப்புகள், மருத்துவ சேவைகள், வருவாய் பெருக்கம், கல்வித் தரம் உள்ளிட்ட எதிலுமே மக்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசு, சாராய விற்பனையில் மட்டும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
கோட்டைகளை கட்டி ஆண்ட ஒரு மகாராஜாவின் உயிர் கிளியிடம் இருந்த கதை போல, கொள்ளையடித்து வாழும் கோபாலபுர குடும்பத்தின் குடுமி இந்த டாஸ்மாக் கையில் தான் உள்ளது.
தமிழகத்தின் டாஸ்மாக் துறையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினால் திமுகவின் அத்தனை தில்லுமுல்லுகளும் சிதறிவிடும்,
அதனால் தான் ஊரே வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் ஊற்றிக் கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது இந்த திருட்டு மாடல் அரசு. இப்படிப்பட்ட ஒரு சுயநல அரசுக்கு மக்கள் பணியில் தொடர என்ன தகுதி இருக்கிறது? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
BJP H Raja Say About DMK MK Stalin TASMAC