'100 சகாபுதின்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது; நவம்பர் 14 தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி': அமித்ஷா உறுதி - Seithipunal
Seithipunal


பீகாரில் வரும் நவம்பர் 06 மற்றும் 09 ஆம் தேதிகளில் இருக்கட்டங்களாக தேர்தல் நடைபெற்று 14 ஆம் தெத்து வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, பீஹாரில் பக்சர், சிவான் ஆகிய பகுதிகளில் பாஜக ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது; சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீஹாரில், இண்டி கூட்டணியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள். வரும் நவம்பர் 14-ஆம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள், அங்கு மோதல் நடந்து வருகிறது என்றும், மறுபுறம், இங்கே பிரதமர் மோடி இருமுறை பேரணிகளில் பேசியுள்ளார். முதல்வர் நிதிஷ்குமாரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாஸ்வான், குஷ்வாஹா என ஒவ்வொருவரும் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒன்றிணைந்துள்ளதாகவும், தான் 02 மாதங்களாக பீஹாரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நான் தான் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் நவம்பர் 14-ஆம் தேதி மதியம் 01 மணியளிவில் லாலு பிரசாத் மகன்களின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றும் மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பீஹாரில் தேசிய ஜனநாயக கூ.ட்டணியின் ஆட்சி அமையும் என்றும், நவம்பர் 14-ஆம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று பேசியுள்ளார்.

அத்துடன், 20 ஆண்டுகளாக சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த சகாபுதினை கண்டு துணிச்சலான சியான் மக்கள் பயப்படவில்லை என்றும், சகாபுதின் மகனுக்கு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ரகுநாத்புர் சட்டசபை தொகுதியில் சீட் வழங்கியுள்ளார்.

இப்போது நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், 100 சகாபுதின்கள் வந்தாலும் உங்களுக்கு எந்தவித தீங்கும் செய்ய முடியாது என்று அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah assures that November 14 will be the real Diwali for the people of Bihar


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->