தகுதியற்ற அரசு ஆசிரம உயர்நிலைப் பள்ளி கட்டிடம் - கடிதம் எழுதிய பிரியங்ககாந்தி!
congress priyanga gandhi kerala school building
கேரளாவின் வயநாடு மாவட்டம் திருநெல்லியில் உள்ள அரசு ஆசிரம உயர்நிலைப் பள்ளி கட்டிடம் தகுதியற்றது என பொதுப்பணித் துறை மதிப்பீட்டில் தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களை கண்னூர் மாவட்டம் ஆரலத்தில் உள்ள மாதிரி உறைவிடப் பள்ளிக்கு மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், இந்த முடிவு மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளதாக பிரியங்கா காந்தி எச்சரித்துள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மாநில எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி நலத்துறை அமைச்சர் ஓ.ஆர். கேலுவுக்கு எழுதிய கடிதத்தில், “அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களை படிப்பை கைவிடத் தூண்டக்கூடும். ஏனெனில், கண்னூர் மாவட்டம் மிகவும் தொலைவில் உள்ளது. அங்கு தினசரி பயணம் செய்வது மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் சாத்தியமற்றது. இதனால் பலர் பள்ளிக்குச் செல்லாமலேயே விடலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “தொலைவிலுள்ள பள்ளிக்கு மாற்றம் செய்வதற்கு பதிலாக, தற்போதைய வயநாடு மாவட்டத்திலேயே பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மற்றொரு பள்ளிக்கு மாணவர்களை மாற்ற வேண்டும். இதனால் அவர்களின் கல்வி இடையூறு இல்லாமல் தொடரும்,” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
congress priyanga gandhi kerala school building