கரூர் கூட்டத்தில் விஜய், செந்தில் பாலாஜி குறித்து பேசியதால் தான் மின்தடை ஏற்படுத்தினர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சட்டசபை தேர்தலையொட்டி, 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற பெயரில், யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பெரம்பலுாரில், பிரசாரம் மேற்கொண்ட போது பேசியதாவது:

சமூக நீதி கட்சி என கூறிக் கொள்ளும் தி.மு.க., ஆட்சியில், பெண்கள் இரவில் நடந்து செல்ல முடியவில்லை. கல்லுாரி செல்லும் மாணவியர் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார். அத்துடன், பெரம்பலுாரில், கிட்னி திருட்டு சாதாரணமாகி விட்டது என்றும், பெரம்பலுாரில் மட்டும் மழையால் 12 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் நாசமாகி இருக்கிறது என்று மக்கள் மத்தியில் கூறியுள்ளார். எ 

மேலும், தி.மு.க.,வைத் தவிர, யார் பிரசாரம் செய்தாலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்று நைனார் கூறியதோடு, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பேசியபோது, மின் தடை ஏற்பட்டதால் 41 பேர் உயிரிழந்தமை பற்றியும் பேசியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உடலை இரவோடு இரவாக ஏன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்..? மாநில முதல்வர் ஏன் உடனே கரூர் செல்ல வேண்டும்..? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றவா..?. அவரை பற்றி விஜய் பேசியதால் தான் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இதை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அழைக்கவில்லையா..? அவரே, இது குறித்து கேள்வி கேட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக, கடந்த தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகள் அது வழங்கவில்லை. லோக்சபா தேர்தல் வந்தபோது, தகுதியான பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கியது. தற்போது, விடுபட்ட பெண்களுக்கு வழங்க ஏற்பாடு நடக்கிறது. இதை ஏன் ஆட்சிக்கு வந்த உடனே செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியுள்ளதாவது: காவிரி -குண்டாறு இணைப்புக்கு, இதுவரை எந்த முயற்சியும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு, ரூ.150 கோடிக்கு, மருதை ஆறு குறுக்கே பாலம் அமைத்தது; ரூ.3,500 கோடியில் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கும்பகோணத்திற்கு சாலை அமைத்து கொடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 'இண்டி' கூட்டணியில் இருக்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன், ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி பெற்று துறைமுகம் அமைத்துள்ளார். ஆனால், தமிழக அரசு மட்டும் மக்களை சிந்திக்க விடாமல் செய்கிறதாகவும், இதற்கு மக்கள் தி.மு.க., கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்றும் பா.ஜ., கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendran alleges that the power outage was caused because Vijay spoke about Senthil Balaji at the Karur meeting


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->