பாலியல் வன்கொடுமை வழக்கில் இசை அமைப்பாளர் கைது! அதிர்ச்சியில் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சச்சின் சங்வி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Stree 2, Bhediya உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை உருவாக்கிய சச்சின் சங்வி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 வயது இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் புகார்படி, இசைத் துறையில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சங்வி அவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக தொடர்பு கொண்டார். 

சில நாட்களுக்குப் பிறகு, சங்வி தனது ஸ்டூடியோவுக்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்தார். அப்போது அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறியதுடன், அந்த நம்பிக்கையை பயன்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து நடந்த துன்புறுத்தலால் மனஅழுத்தமடைந்த அந்த பெண் சமீபத்தில் மும்பை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சச்சின் சங்வியை கைது செய்தனர்.

பாலிவுட்டில் பெயர் பெற்ற இசையமைப்பாளராக உள்ள சங்வி மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு தற்போது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bollywood music director arrested


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->