விஜய் - டி.கே.சிவக்குமார் அருகருகே... கோவளத்தில் களைகட்டிய தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு...! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன்ஸ் கோவ் விடுதியில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்மாநிலங்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரள முதலமைச்சர் சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் மல்லுப்பட்டி விக்ரமர்கா கலந்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்ற உள்ளதால், முதலமைச்சர் ரங்கசாமி மாநாட்டை புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தென்மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் வகையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனுடன் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அந்தமான், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.

தென்மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை சுமுகமாக பேணுவதுடன், மாநிலங்களுக்கிடையே நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

எல்லைப் பிரச்சினைகள், பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகளை அதிகரிப்பது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை, காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாநாடு தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதலமைச்சர் விஜய் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.மேலும், தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தென்மண்டல கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay DK Sivakumar side by side Conference Southern Chief Ministers Kovalam


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->