திருவாரூர்: காதலி சொன்ன வார்த்தை... அடுத்த நொடியே குளத்தில் குதித்த காதலன்!
thiruvarur love issue
திருவாரூர் மாவட்டத்தின் திருக்கண்ணமங்கை பகுதியில் காதல் விவகாரத்தில் ஒரு இளைஞரின் உயிர் பறிபோயுள்ளது.
மருதப்பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழகி, காதலித்து வந்துள்ளார்.
சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறை சரிசெய்யும் நோக்கில் மாணவி திருவாரூருக்கு வந்திருந்தார். இருவரும் பேசும் போதே மீண்டும் வாக்குவாதம் வெடித்ததால் மனஉளைச்சலில் இளைஞர் அருகிலிருந்த குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, அவரை காப்பாற்ற குளத்தில் குதித்தார். ஆனால் நீச்சல் தெரியாத அந்த இளைஞர் நீரில் சிக்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் இருவரையும் குளத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரவீனின் உயிர் காப்பாற்ற முடியாமல் போன நிலையில், மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.