கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தயார் செய்துள்ள சிபிசிஐடி..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் காதல் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்தது. இந்த வழக்கில், கவினின் காதலியின் தந்தை எஸ்.ஐ. சரவணன், சகோதரர் சுர்ஜித் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கவின் கொலை வழக்கில் கைதான 03 பேரும் பாளையங்கோட்டை சிறையில் உள்ள நிலையில், 88 நாட்களுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தயாரான நிலையில் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வழக்கு தொடர்பில் துல்லியமான ஆதாரங்களுடன் சிபிசிஐடி விசாரணை செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப் பத்திரிக்கை மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBCID has prepared a chargesheet in the Kavin honor killing case


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->